‘டியர் காம்ரேட்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறார்.

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sakthi Nian | Jun 04, 2019 04:18 PM

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது பரத் கம்மா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து ‘டியர் காம்ரேட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூல 26ம் தேதி ரிலீசாகவுள்ளது.

Dev3 1 BNS Tamil 1 4 BT

இதைத் தொடர்ந்து ‘காக்கா முட்டை’ திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்குநராக அறிமுகமாகும் ‘ஹீரோ’ படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படமும் 4 தென்னிந்திய மொழிகளில் உருவாகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘பேட்ட’ நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

விளையாட்டு சம்மந்தப்பட்ட மியூசிக் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் திகந்த், வெண்ணிலா கிஷோர், சரண் சக்தி, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஜான் எடதட்டில் ஆகியோர் நடிக்கின்றனர். முரளி கோவிந்தராஜு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா பைக் ரேஸராக நடிப்பதால், பைக் ரேஸ் பந்தயத்தில் சர்வதேச அளவில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியரான ரஜினி கிருஷ்ணனிடம் நடிகர் விஜய் தேவரகொண்டா பயிற்சி எடுத்து வருகிறார். மேலும், மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தில் இடம்பெறும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : #DHONI