சூப்பர் ஜி சூப்பர் ஜி - இந்த இயக்குநருடன் மீண்டும் விஜய்சேதுபதி

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sakthi Nian | May 29, 2019 04:15 PM

சூப்பர் ஜி சூப்பர் ஜி - இந்த இயக்குநருடன் மீண்டும் விஜய்சேதுபதி

Dev3 BNS 2 Tamil May 29

விஜய் சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கியவர் பிஜூ விஸ்வநாத். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘சென்ன பழனி மார்ஸ்’. இந்த படத்தை ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷனுடன் இணைந்து விஜய் சேதுபதி புரொடக்ஷன் சார்பாக விஜய்சேதுபதி தயாரித்துள்ளார்.

புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்துக்கு விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். இந்த படத்துக்கு நிரஞ்சன் பாபு என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை  நோக்கிய கனவும்  நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம்.  சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம்.

அப்படி ஒரு கனவை மிக சுவாரஸ்யமான ஒரு பயணக் கதையைாக திரையில் ஜாலியாக இந்த பத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

Tags : #DEV3