மகிழ் திருமேணி இயக்கத்தில் அருண்விஜய் நடித்த தடம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sakthi Nian | May 29, 2019 05:19 PM

சூர்யா பட வில்லனுடன் வெறித்தனமாக பயிற்சி செய்யும் அருண் விஜய்

Dev3 BNS 4 Tamil May 29

மகிழ் திருமேணி இயக்கத்தில் அருண்விஜய் நடித்த தடம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் பாக்ஸர் என்கிற படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க, விவேக் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் Johnny Tri-Nguyen உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குருவுடன் என்கிற வார்த்தையை அவர் பதிவிட்டுள்ளார்.

ஜானி ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருந்தார். மேலும் அருண் விஜய் தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து அக்னி சிறகுகள் எனும் படத்தில் நடித்துவருகிறார்.  இந்த படத்தை மூடர் கூடம் நவீன் இயக்குகிறார்.

Tags : #DHONI