தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்பட பாணியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Apr 17, 2019 03:10 PM

கெட் ரெடி ஃபோக்ஸ்! உங்க ஊறு தலைவன தேடிப்பிடிங்க..: சர்கார் ஸ்டைலில் ஓட்டு போட சொன்ன பிரபலம்

Dev3 BNS News2 April 17 BT

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்பட பாணியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஓட்டு உரிமை குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், நாளை ஏப்.18ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை கூறும் விதமாக விஜய் பேசும் வசனங்கள் கொண்ட சர்கார் திரைப்பட வீடியோ ஒன்றை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ஒரே ஒரு ஓட்டு பல நாடுகளில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியிருப்பதை எடுத்துக் கூறும் விஜய், ஒரு குடிமகனின் குறைந்தபட்ச தேசப்பற்றே ஓட்டுப்போடுவது தான். எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும், அதனை தூக்கிப்போட்டுவிட்டு ஓட்டு போடுங்க என்று விஜய் பேசியுள்ளார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடிக்கிறார்.

Tags : #TAMIL1