சிவகார்த்திகேயன் படத்திற்காக இணைந்த பிரபல இயக்குனர்கள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sakthi Nian | May 20, 2019 02:37 PM

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடித்து வருகிற மே 17 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம்  மிஸ்டர்.லோக்கல்.

Dev3 Tamil 1 May 20 BT

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தன. அதன் ஒரு பகுதியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ்,அனு இமானுவேல், யோகிபாபு, சூரி ,நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.<br />

தற்போது இயக்குனர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி&nbsp; ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, எடிட்டராக அந்தோணி மற்றும் கலை இயக்குனராக வீரசமர் ஆகியோர்கள் இணைந்துள்ளனர்.

Tags : #AJITH